ADDED : மார் 05, 2025 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தின், பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லையில், நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த மற்றும் கைவிடப்பட்ட, 146 இருசக்கர வாகனங்கள், பள்ளிக்கரணை காவல் நிலையத்தில், பகிரங்க ஏலம் விடப்படவுள்ளன.
இதில் பங்கேற்போர், தங்களது அடையாள அட்டை, ஜி.எஸ்.டி., பதிவு எண் ஆதாரங்களுடன், மார்ச் 20ம் தேதி காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணிக்குள் முன்பதிவு கட்டணம் செலுத்தி, பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பதிவு செய்த ஏலதாரர்கள், மார்ச் 24ம் தேதி காலை 10:00 மணிக்கு, ஏலத்தில் பங்கேற்கலாம். இதில் பதிவு செய்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.