/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுப்பொலிவு பெற்ற 28 பூங்காக்கள்
/
புதுப்பொலிவு பெற்ற 28 பூங்காக்கள்
ADDED : ஆக 12, 2024 04:31 AM

பெருங்களத்துார்,:தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்தில், 28 பூங்காக்களை, 2 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலத்தில், 68 பூங்காக்கள் உள்ளன. இப்பூங்காக்களை பராமரிக்காததால் சீரழிந்து விட்டது.
மின் விளக்குள் முறையாக எரியவில்லை. குழந்தைகள் உபகரணங்கள் துருபிடித்து பயன்படுத்த முடியவில்லை. இருக்கைகள் உடைந்து விட்டன.
நீரூற்றுகள் வேலை செய்யவே இல்லை. இது குறித்த புகாரை அடுத்து, இம்மண்டலத்தில் உள்ள பூங்காக்களை புனரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 2 கோடி ரூபாய் செலவில், 28 பூங்காக்களை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
வர்ணம் தீட்டுதல், விளையாட்டு உபகரணங்கள், இருக்கை, மின் விளக்குகளை சீரமைத்தல், நடைபாதையை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிகள், ஒரு மாதத்தில் முடிக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

