/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விமானத்தில் கடத்தி வரப்பட்ட 4 வெள்ளை கிளிகள் பறிமுதல்
/
விமானத்தில் கடத்தி வரப்பட்ட 4 வெள்ளை கிளிகள் பறிமுதல்
விமானத்தில் கடத்தி வரப்பட்ட 4 வெள்ளை கிளிகள் பறிமுதல்
விமானத்தில் கடத்தி வரப்பட்ட 4 வெள்ளை கிளிகள் பறிமுதல்
ADDED : மார் 28, 2024 12:16 AM

சென்னை:மலேஷியா நாட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட, அபூர்வ வகை வெள்ளை கிளிகள்பறிமுதல் செய்யப்பட்டன.
மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை வந்தது. அதில், சென்னையைச் சேர்ந்த முகமது ராஜா 28, ரமீஷ் ராஜா, 27, ஆகியோர், பெரிய பிளாஸ்டிக் கூடைகளுடன் வந்தனர்.
சுங்க அதிகாரிகள் அந்த கூடைகளை திறந்து பார்த்த போது, வெள்ளை நிறத்தில், அபூர்வ வகையைச் சேர்ந்த நான்கு கிளிகள் இருந்தன.
இவை வீட்டில் வளர்க்கப்படும் கிளிகள் என அவர்கள் கூறியதை நம்பாத சுங்க அதிகாரிகள், பெசன்ட் நகரிலுள்ள மத்திய வன உயிரினங்கள் பாதுகாப்பு குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் விரைந்து வந்து கிளிகளை ஆய்வு செய்து, கடத்தி வந்தவர் களிடமும் விசாரித்தனர்.
'கக்காட்டூஸ்' என்ற வகையைச் சேர்ந்த இந்த அபூர்வ வெள்ளைகிளிகள் சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் காணப்படும்.இந்தியாவிற்குள் இவற்றை கொண்டுவர அனுமதியும், மருத்துவ பரிசோதனை சான்றிதழும் இல்லை.
இந்த கிளிகளை இந்தியாவிற்குள் அனுமதித்தால் நோய் கிருமிகள், வைரஸ் பரவி மனிதர்கள், விலங்குகள், பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, கிளிகளை மலேஷியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.அதற்கான செலவுகளை, கடத்தி வந்த மேற்கண்ட இருவரிடமும் வசூலிக்க வேண்டுமென, வன உயிரின பாதுகாப்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் கூறினர்.
அதன்படி, நான்கு வெள்ளை கிளிகளையும், நேற்று இரவு விமானம் வாயிலாக, மலேஷியாவுக்கு அனுப்பிவைத்தனர்.