/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் 53 பேர் வேட்பு மனு தாக்கல்
/
ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் 53 பேர் வேட்பு மனு தாக்கல்
ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் 53 பேர் வேட்பு மனு தாக்கல்
ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் 53 பேர் வேட்பு மனு தாக்கல்
ADDED : மார் 28, 2024 12:45 AM

செங்கல்பட்டு:ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், கடைசி நாளான நேற்று, த.மா.கா., வேட்பாளர் உள்ளிட்ட 28 பேர் மனு தாக்கல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கு, கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது. கடந்த 21ம் தேதி, சுயேச்சை வேட்பாளர் முகம்மத் யாசின், 25ம் தேதி மனு தாக்கல் செய்தார்.
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளரும், தற்போதைய எம்.பி.,யுமான டி.ஆர்.பாலு நான்கு மனுக்கள் தாக்கல் செய்தார்.
அவருக்கு மாற்று வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., வைத்தியலிங்கம், அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமார், மாற்று வேட்பாளர் ஜெயபிரகாஷ், பகுஜான் சமாஜ் கட்சி வேட்பாளர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சி வெங்கடாசலம், அவரின் மாற்று வேட்பாளர் பிரசன்னா தைரியம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என, நேற்று முன்தினம் வரை, மொத்தம் 25 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
தொடர்ந்து, த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், நேற்று மனுத்தாக்கல் செய்தார். பா.ஜ., மாவட்ட தலைவர் வேதாசுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ., காயத்ரிதேவி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் வந்தனர்.
நேற்று மாலை 3:00 மணி வரை, 28 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை, 53 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
காஞ்சியில் 25 பேர்
காஞ்சிபுரம் - தனி லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருப்போரூர், செய்யூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளில், 17.3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்ட அளவில், 1,417 ஓட்டுச்சாவடிகளில், 178 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டத்தில், 6,800 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் பணிகளை மேற்கொள்ள துணை கலெக்டர்கள் 16 பேர் நோடல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் தொகுதிக்கு, தி.மு.க., வேட்பாளர் செல்வம், அ.தி.மு.க., ராஜசேகர், பா.ம.க., ஜோதி, நாம் தமிழர் சந்தோஷ்குமார், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இளையராஜா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 10 பேர் என, 25 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்று பரிசீலனை முடிந்த பின், 30ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். காஞ்சிபுரம் தொகுதிக்கான பொது பார்வையாளராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூபேந்திர சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் தொடர்பாக, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடி மையங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளம் அமைக்கப்பட்டுஉள்ளது. பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், மத்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அருண்ராஜ்
மாவட்ட தேர்தல் அலுவலர்,
ஸ்ரீபெரும்புதுார் தொகுதி.
லோக்சபா தேர்தல் தொடர்பாக, இதுவரை 28 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய இணையதளத்தில், பொதுமக்கள் புகார் அளிக்கலாம். புகார் மீது, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
அபிஷேக் சந்திரா
தேர்தல் பொது பார்வையாளர்,
ஸ்ரீபெரும்புதுார் தொகுதி.