/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள் கோவிலில் 650 கிலோ குட்கா பறிமுதல்
/
சிங்கபெருமாள் கோவிலில் 650 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : ஏப் 20, 2024 09:34 PM
மறைமலை நகர்:திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சிங்கபெருமாள் கோவில் அடுத்த சத்யா நகர் பகுதியில், மறைமலை நகர் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையில், போலீசார் வாகன சோதனையில் நேற்று காலை ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த 'டாடா ஏஸ்' சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த வாகனத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப் உள்ளிட்ட புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் 650 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த நிர்மல் குமார், 32, என்பவரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

