/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் ஓட்டளிக்காதோர் 9.50 லட்சம் பேர் 2019 தேர்தலை விட 2.6 சதவீதம் சரிவால் அதிர்ச்சி
/
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் ஓட்டளிக்காதோர் 9.50 லட்சம் பேர் 2019 தேர்தலை விட 2.6 சதவீதம் சரிவால் அதிர்ச்சி
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் ஓட்டளிக்காதோர் 9.50 லட்சம் பேர் 2019 தேர்தலை விட 2.6 சதவீதம் சரிவால் அதிர்ச்சி
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் ஓட்டளிக்காதோர் 9.50 லட்சம் பேர் 2019 தேர்தலை விட 2.6 சதவீதம் சரிவால் அதிர்ச்சி
ADDED : ஏப் 20, 2024 11:47 PM

செங்கல்பட்டு:ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், 60.21 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலை விட, இந்த தேர்தலில் 2.06 சதவீதம் குறைவாக ஓட்டு பதிவாகி உள்ளது. மொத்த வாக்காளர்களில், 9 லட்சத்து 46 ஆயிரத்து 94 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை.
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமார், த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட 31 பேர் போட்டியிட்டனர்.
தொகுதியில், 31 பேர் போட்டியிட்டதால், ஆறு சட்டசபை தொகுதிகளிலும், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தலா இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம், ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் தலா ஒன்று என, நான்கு இயந்தியங்கள் பயன்படுத்தப்பட்டது.
இந்த தொகுதியில், ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 80 ஆயிரத்து 263 பேர், பெண் வாக்காளர்கள் 12 லட்சத்து ஆயிரத்து 427 பேர், மூன்றாம் பாலினத்தவர் 429 பேர் என, மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 119 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில், 18 வயது முதல் 19 வயது வரை உள்ள இளம் வாக்காளர்கள், 32,243 பேர், 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர், 24,579 பேர், மாற்றுத்திறனாளிகள் 7,850 பேர் உள்ளனர்.
இந்த தொகுதியில், 2,437 ஓட்டுச்சாவடிகளில், நேற்றுமுன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 29 ஆயிரத்து 861 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 6 ஆயிரத்து 105 பேரும், இதர வாக்காளர்கள் 59 பேரும் என, மொத்தம் 14 லட்சத்து 36 ஆயிரத்து 25 ஓட்டுக்கள் பதிவாகின. ஆறு தொகுதியிலும், 60.21 சதவீதம் பேர் ஓட்டு போட்டனர்.
இந்த லோக்சபா தேர்தலில், 9 லட்சத்து 46 ஆயிரத்து 94 பேர் ஓட்டளிப்பதை தவிர்த்துள்ளனர். இதனால், ஓட்டுப்பதிவு சதவீதம் கடந்த 2019 தேர்தலை விட 2.6 சதவீதம் சரிந்துள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், 62.27 சதவீதம் ஓட்டுப்பதிவானது. இந்த முறை, 2.06 சதவீதம் ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது. இதில், பெண்களை விட ஆண்கள் அதிகமாக ஓட்டளித்துள்ளனர்.

