/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பணி செய்ய விடாமல் தடுத்த பெண் மீது வழக்கு
/
பணி செய்ய விடாமல் தடுத்த பெண் மீது வழக்கு
ADDED : செப் 17, 2024 09:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், செய்தி மக்கள் தொடர்பு பிரிவில் பணிபுரிந்து வருபவர் சரஸ்வதி, 37. கடந்த 10ம் தேதி, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமில் பங்கேற்றார்.
அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற அலமேலு, 37, என்ற பெண், சரஸ்வதியை பணி செய்யவிடாமல் தடுத்து, பிரச்னை செய்துள்ளார்.
இது குறித்து, சரஸ்வதி அளித்த புகாரின் பேரில், செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.