/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எலும்புக் கூடாக மாறிய நடைபாதை மேம்பாலம்
/
எலும்புக் கூடாக மாறிய நடைபாதை மேம்பாலம்
ADDED : செப் 08, 2024 12:26 AM

அச்சிறுபாக்கம்:சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையொட்டி, அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது, அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதை தவிர்க்கும் விதமாக, சில ஆண்டுகளுக்கு முன், இரும்பு நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டது.
கடந்த 2022ம் ஆண்டு 'மாண்டஸ்' புயலின் காரணமாக பெருத்த சேதம் அடைந்தது. இதன் காரணமாக நடைபாதையின் கூரையில் இருந்த பிளாஸ்டிக் ஓடுகள், பிய்த்துக் கொண்டு, விபத்தை ஏற்படுத்தும் வகையில் காற்றில் ஊசலாடின.
இதனால், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் இப்பகுதியை கடந்து சென்றனர். அதன்பின், 2023ல் இரும்பு நடைபாதை கூரையின் மீது இருந்த பிளாஸ்டிக் ஓடுகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில், கூரை அகற்றப்பட்டு ஓராண்டாகியும், தற்போது வரை மீண்டும் அமைக்கப்படாமல் திறந்தவெளியில் உள்ளது. எனவே, பள்ளி மாணவ - மாணவர்களின் நலன் கருதி, புதிதாக கூரையின் பிளாஸ்டிக் ஓடுகள் அமைக்க, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.