/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொலைத்தொடர்பு வடத்தில் சிக்கி வாகனம் மீது சாய்ந்த மின்கம்பம்
/
தொலைத்தொடர்பு வடத்தில் சிக்கி வாகனம் மீது சாய்ந்த மின்கம்பம்
தொலைத்தொடர்பு வடத்தில் சிக்கி வாகனம் மீது சாய்ந்த மின்கம்பம்
தொலைத்தொடர்பு வடத்தில் சிக்கி வாகனம் மீது சாய்ந்த மின்கம்பம்
ADDED : ஏப் 08, 2024 11:42 PM

துரைப்பாக்கம் : துரைப்பாக்கம், குமரன்குடில் நகர் ஐந்தாவது தெரு, 20 அடி அகலம் கொண்டது. இங்கு, 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கம்பம் நட்டு, உயரழுத்த மின்கம்பி வாயிலாக, இங்குள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தெருவின் குறுக்கே, 'டிவி' மற்றும் இணைய சேவை வடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்நிலையில் நேற்று, ஒரு லோடு வாகனம் சென்ற போது, கேபிளில் சிக்கியது. இதில், குறுக்கே சென்ற மின் இணைப்பு வடம் இழுபட்டு, அங்கு நின்ற வாகனத்தின் மீது, மின்கம்பம் சரிந்து நின்றது.
அந்த வாகனம் அங்கு இல்லையென்றால், மின் கம்பம் தெருவில் விழுந்து, மின்கம்பியால் விபரீதம் ஏற்பட்டிருக்கும். பின், துரைப்பாக்கம் மின்வாரிய ஊழியர்கள், மின்கம்பத்தை நிமிர்த்தி, சீரமைத்தனர்.
இதுகுறித்து, பகுதிமக்கள் கூறியதாவது:
மின்கம்பத்தை ஒட்டி வாகனம் நின்றதால், மின்சார விபத்தில் இருந்துதப்பினோம். இப்பகுதியில் பூமிக்குள் மின் கேபிள் பதித்து, ஓராண்டிற்கு மேல் ஆகிறது. உயரழுத்த மின்கம்பிகளை அகற்றவிட்டு, பூமிக்குள் பதித்த மின்கேபிள் வழியாக மின் இணைப்பு வழங்கும்படி, பல மாதங்களாக கோரிக்கை வைக்கிறோம். மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

