/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றத்தில் தீவிபத்து 'ஸ்கிராப்' கிடங்கு எரிந்து நாசம்
/
திருக்கழுக்குன்றத்தில் தீவிபத்து 'ஸ்கிராப்' கிடங்கு எரிந்து நாசம்
திருக்கழுக்குன்றத்தில் தீவிபத்து 'ஸ்கிராப்' கிடங்கு எரிந்து நாசம்
திருக்கழுக்குன்றத்தில் தீவிபத்து 'ஸ்கிராப்' கிடங்கு எரிந்து நாசம்
ADDED : ஏப் 22, 2024 05:32 AM

திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் - சதுரங்கப்பட்டினம் சாலை புறவழி சந்திப்பு அருகில், தனியார் இடம் உள்ளது. அதை வாடகைக்கு பெற்றுள்ள வேறு நபர், அங்கு 'ஸ்கிராப்' கழிவுகள் வைத்து, கிடங்காக பயன்படுத்தி வருகிறார். அங்கு, இரும்பு, மரம், அட்டை, பிளாஸ்டிக் கழிவுகள் வைக்கப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, கிடங்கில் தீப்பற்றி, கிடங்கு முழுதுமாக பரவியது. இது குறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள், உடனே அங்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர்.
தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், அதை அணைக்க பல மணி நேரம் போராடினர். காலை 5:00 மணிக்கு பிறகே, முற்றிலுமாக அணைக்க முடிந்தது.
தீயில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்கிராப் பொருட்கள் நாசமானதாகக் கருதப்படுகிறது. மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டதால், அருகில் உள்ள சவுண்ட் சர்வீஸ் நிறுவனம் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டன.
இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருக்கழுக்குன்றம் தீயணைப்புத் துறையினர் கூறியதாவது:
கிடங்கு உரிமையாளர் வெளிநாடு சென்றுள்ளார். தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் பாதுகாப்பாக வெளியேறி விட்டனர். தீப்பற்றியது எப்படி என்பதைக் கண்டறிய முடியவில்லை. உரிமையாளர் வந்தால் தான், சேத மதிப்பை கணக்கிட முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

