/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நடைபாதையில் மின்மாற்றி மறைமலை நகரில் ஆபத்து
/
நடைபாதையில் மின்மாற்றி மறைமலை நகரில் ஆபத்து
ADDED : ஜூலை 19, 2024 12:22 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி பிரதான சாலையாக கம்பர் தெரு உள்ளது. இந்த தெருவில், 50க்கும் மேற்பட்ட கடைகள், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்டவை உள்ளன.
இந்த சாலை ஓரம், நகராட்சி சார்பில் 'பேவர் பிளாக்' கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட நடைபாதையில், பள்ளி வளா கத்தின் அருகில், பாதாரி களுக்கு இடையூறாக, மிகவும் தாழ்வாக, 11,000 மெகாவாட் திறன் கொண்ட ஒரு மின் மாற்றி உள்ளது.
இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
பள்ளிக்கு அருகில் உள்ள இந்த மின்மாற்றி, மிகவும் தாழ்வாக உள்ளதால்,இந்த பகுதியை கடந்து செல்லும் பள்ளி குழந்தைகள்மின் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மேலும், மின்மாற்றி பகுதி சாலை ஒட்டிய நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கடந்த ஆண்டு, மறைமலை நகர் சிப்காட் பகுதியில், சாலை ஓரம் தாழ்வாக இருந்த மின்மாற்றியில் சரக்கு வாகனம் மோதி, அதன் டிரைவர் உடல் கருகி உயிரிழந்தார்.
அது போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன், தாழ்வாக உள்ள இந்த மின்மாற்றியை மாற்றி, வேறு இடத்தில் உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.