ADDED : மே 18, 2026 04:11 PM

அச்சிறுபாக்கம், மே 19–
அனந்தமங்கலம் ஊராட்சியில் பயன்பாடின்றி வீணாகி வரும் மண்புழு உரக்கூடத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் அனந்தமங்கலம் ஊராட்சி உள்ளது.
இங்கு 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட துாய்மை பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை சேகரித்து குப்பை கிடங்குகளில் கொட்டி வருகின்றனர்.
அவற்றை, தரம் பிரித்து மண் உரம் தயாரிக்க கடந்த ஆண்டுகளுக்கு முன், 2.50 லட்சம் ரூபாயில் மண்புழு உரக்கூடம் கட்டப்பட்டது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பயனடைந்தனர். ஆனால், 5 மாதங்கள் மாதம் மட்டுமே செயல்பட்டு வந்த மண்புழு உரக்கூடம் மூடப்பட்டது. ஊராட்சி அலுவலர்கள் முறையாக செ யல்படுத்த தவறியதால், பயன்பாடின்றி வீணாகி வருகிறது.
எனவே, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மண்புழு உரக்கூடத்தை ஆய்வு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
