/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
' சி-விஜில் ' புகார்கள் மீது 100 நிமிடங்களில் நடவடிக்கை
/
' சி-விஜில் ' புகார்கள் மீது 100 நிமிடங்களில் நடவடிக்கை
' சி-விஜில் ' புகார்கள் மீது 100 நிமிடங்களில் நடவடிக்கை
' சி-விஜில் ' புகார்கள் மீது 100 நிமிடங்களில் நடவடிக்கை
ADDED : ஏப் 11, 2024 12:42 AM

காஞ்சிபுரம், ஏப். 11--
காஞ்சிபுரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் விதிமீறல் பற்றி அரசியல் கட்சியினர், வாக்காளர்கள் என அனைத்து தரப்பினரும் புகார் அளிக்கும் வகையில், தேர்தல் கமிஷன் 'சி--விஜில்' என்ற மொபைல் ஆப் அறிமுகம் செய்துள்ளது.
இந்த சி-விஜில் மொபைல் ஆப் மூலமாக அனைத்து தரப்பினரும் புகார் அளிக்க ஏதுவாக, சி--விஜில் மொபைல் ஆப் விளம்பர பதாகையை கலெக்டர் கலைச்செல்வி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வெளியிட, எஸ்.பி., சண்முகம் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், பயிற்சி கலெக்டர் சங்கீதா உள்ளிட்டோர் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து, கலெக்டர் கலைச்செல்வி நிருபர்களிடம் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் சம்பந்தமான புகார்களை, சி--விஜில் மொபைல் ஆப் மூலமாக அனைவரும் தெரிவிக்கலாம். இதில் புகார் அளிக்கப்பட்டவுடன், 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பணப்பட்டுவாடா, தேர்தல் விதிமீறல், வாக்காளர்களுக்கு மது வினியோகம், ஆயுதங்களை கொண்டு மிரட்டுதல் என அனைத்து வகையான தேர்தல் புகார்களை தெரிவிக்கலாம்.
பரந்துார் மற்றும் ஆர்.என்.கண்டிகை பகுதியில் உள்ள தேர்தல் புறக்கணிப்பு பிரச்னையை அங்குள்ள மக்களிடம் பேசி உள்ளோம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சி--விஜில் மொபைல் ஆப் மூலம், 113 புகார்கள் வந்துள்ளன. அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் ஆகியோரிடம் இருந்து, இதுவரை 1,195 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

