/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றம் வாரச்சந்தையில் நுகர்வோரிடமும் அடாவடி வசூல்
/
திருக்கழுக்குன்றம் வாரச்சந்தையில் நுகர்வோரிடமும் அடாவடி வசூல்
திருக்கழுக்குன்றம் வாரச்சந்தையில் நுகர்வோரிடமும் அடாவடி வசூல்
திருக்கழுக்குன்றம் வாரச்சந்தையில் நுகர்வோரிடமும் அடாவடி வசூல்
ADDED : செப் 12, 2024 08:40 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம், முத்திகைநல்லான்குப்பம் பகுதியில், பேரூராட்சி நிர்வாகத்தின்கீழ், வாரச்சந்தை செயல்படுகிறது. வாரத்தில் ஒருநாள் மட்டும், செவ்வாய்க்கிழமைதோறும், மீன், கருவாடு விற்பனையும், மாட்டுச்சந்தையும் நடக்கிறது.
திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புற பகுதியினர், சந்தைக்கு ஆர்வத்துடன் வந்து பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம்.
பேரூராட்சி நிர்வாகம், சந்தையை ஓராண்டு குத்தகைக்கு, பொது ஏலத்தில் தனியாரிடம் அளிக்கும். சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் மட்டுமே கட்டணம் வசூலிக்க, பேரூராட்சி நிர்வாகம் அனுமதிக்கிறது. மாநிலம் முழுதும் இதே நடைமுறை தான்.
ஆனால், இதன் குத்தகைதாரராக இருந்தவர்கள் அனைவரும், சந்தைக்கு வரும் பொதுமக்களிடமும், அவர்கள் வாங்கும் பொருட்களின் தொகைக்கேற்ப, 20 - 50 ரூபாய் வரை, அடாவடியாக கட்டணம் வசூலிப்பதாக, நீண்டகாலமாக குற்றச்சாட்டு உள்ளது.
தற்போது, நடப்பாண்டு, கடந்த ஆக., 1ம் தேதி முதல், 2027 ஜூலை 3ம் தேதி வரை, மூன்றாண்டுகள் தனியார் நடத்த, 14.03 லட்சம் ரூபாய்க்கு குத்தகை அளிக்கப்பட்டுள்ளது.
ஆண்டிற்கு 5 சதவீதம் குத்தகை தொகை உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. புதிய குத்தகைதாரரும், விதிகளுக்கு புறம்பாக, பொதுமக்களிடம் அடாவடி கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுமக்களிடம் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், தொடர்ந்து வசூலிக்கப்பட்டால், குத்தகை உரிமத்தை ரத்து செய்யவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

