/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கற்றல் திறனை மேம்படுத்த மாணவர்களுக்கு ஆலோசனை
/
கற்றல் திறனை மேம்படுத்த மாணவர்களுக்கு ஆலோசனை
ADDED : பிப் 27, 2025 11:45 PM

செங்கல்பட்டு,செங்கல்பட்டு புத்தக திருவிழாவில், கற்றல் திறனை அதிகப்படுத்த மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் சார்பில், ஆறாவது ஆண்டு செங்கை புத்தக திருவிழா, செங்கல்பட்டு அலிசன்காசி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 20ம் தேதி துவங்கி, இன்று 28ம் தேதி வரை நடக்கிறது.
இங்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் மாணவர்களின், திறனை மேம்படுத்தும் வகையில், 'விசுவலைசர்' தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, சுற்றுச்சூழல் சம்பந்தமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இந்த அரங்கிற்கு வரும் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
'விசுவலைசர்' தொழில்நுட்பம், மாணவர்கள் பாடங்களை எளிமையாக புரிந்துகொள்ள உதவுகிறது. கடினமான கருத்துகளை கூட, காட்சி வடிவில் பார்த்து கற்றுக்கொள்ளலாம். முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் உதயகுமார், சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகின்றனர்.
இன்று 28ம் தேதி, புத்தக திருவிழா நிறைவு நாள் விழாவிற்கு, கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா தலைமை தாங்குகிறார்.
முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, கல்பாக்கம் சென்னை அணுமின் நிலைய இயக்குனர் சேஷய்யா உள்ளிட்டோர் பேசுகின்றனர்.இதில் மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம்.

