/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றத்தில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
திருக்கழுக்குன்றத்தில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
திருக்கழுக்குன்றத்தில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
திருக்கழுக்குன்றத்தில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 27, 2025 12:13 AM
சென்னை, 'திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அ.தி.மு.க., செயலர் தினேஷ்குமார் தாக்கப்பட்டதை கண்டித்து, இன்று ஆர்ப்பாட்டம் நடக்கும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துஉள்ளார்.
அவரது அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அ.தி.மு.க., செயலர் தினேஷ்குமாரும், அவரது மனைவியும், பேரூராட்சி வார்டு உறுப்பினருமான சுமிதாவும் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதியில், கஞ்சா மற்றும் குடிபோதையில் கலாட்டா செய்து வரும் வினோத், அப்பு உள்ளிட்டோர், நேற்று முன்தினம் இரவு தினேஷ்குமாரை ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.
இதை தடுக்க முயன்ற மோகன் என்பவரையும் தாக்கியுள்ளனர்.
இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவற்றை பார்க்கும் போது, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தினேஷ்குமார் தாக்கப்பட்டதை கண்டித்து, பிப்., 27ம் தேதி காலை 10:00 மணியளவில், திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.
இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்பர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.