/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையை கடந்த முதியவர் வாகனம் மோதி பலி
/
சாலையை கடந்த முதியவர் வாகனம் மோதி பலி
ADDED : மே 14, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த பரனுார் கிராமத்தை சேர்ந்தவர் பழனி, 60. பெருங்களத்துாரில் உள்ள உணவகத்தில், மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை, வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக பேருந்து பிடிக்க, திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனுார் சுங்கச்சாவடி சென்றார்.
அங்கு சாலையை கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக பலியானார்.
தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், பழனியின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

