sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் இரண்டாவது கட்டமாக 34 கொள்முதல் நிலையங்கள் திறப்பு ஜூன் வரை செயல்படும் என அறிவிப்பு

/

செங்கையில் இரண்டாவது கட்டமாக 34 கொள்முதல் நிலையங்கள் திறப்பு ஜூன் வரை செயல்படும் என அறிவிப்பு

செங்கையில் இரண்டாவது கட்டமாக 34 கொள்முதல் நிலையங்கள் திறப்பு ஜூன் வரை செயல்படும் என அறிவிப்பு

செங்கையில் இரண்டாவது கட்டமாக 34 கொள்முதல் நிலையங்கள் திறப்பு ஜூன் வரை செயல்படும் என அறிவிப்பு


ADDED : ஏப் 05, 2024 12:07 AM

Google News

ADDED : ஏப் 05, 2024 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 1 லட்சத்து 86 ஆயிரத்து 257 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், அதிகளவில் விவசாயம் சாகுபடி செய்யப்படுகிறது.

பாலாற்றங்கரை பகுதி யில், சம்பா பருவத்தில், 25,000 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்யப்பட்டு, அறுவடைக்குதயாராக உள்ளது.

மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், கே.எம்.எஸ்., 2023- - 24 பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

விவசாயிகள் நலன் கருதி, சன்ன ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றிற்கு, 2,310 ரூபாயும், பொது ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றிற்கு, 2,265 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை, உடனுக்குடன் சம்பந்தப்பட்ட கிடங்கு அல்லது நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்க, முநிலை மண்டல மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்என அறிவுறுத்தி, 104 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க, கலெக்டர் அருண்ராஜ் கடந்த பிப்., மாதம் உத்தரவிட்டார்.

இதில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 86 கொள்முதல் நிலையங்களும், தேசிய கூட்டுறவு வேளாண்மை கூட்டுறவு இணையம் 18 கொள்முதல் நிலையங்களும், கடந்த பிப்., 7ம் தேதியில் இருந்து செயல்படுகின்றன.

தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், 23 இடங்களிலும், தேசிய கூட்டுறவு வேளாண்மை கூட்டுறவு இணையம் 11 இடங்களிலும் என, 34 நெல் கொள்ளுமுதல் நிலையம் திறக்க, கலெக்டர் அருண்ராஜ் கடந்த மாதம் 12ம் தேதி உத்தரவிட்டார்.

மாவட்டத்தில், 138 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. வரும் ஜூன் மாதம் வரை, அவை செயல்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய கொள்முதல் நிலையம் அமைவிடங்கள்

மதுராந்தகம் தாலுகா: குன்னங்கொளத்துார், இரும்பேடு, பள்ளியகரம், வேட்டூர், தச்சூர், கொங்கரைமாம்பட்டு, விளாங்காடு, வையாவூர், குமாரவாடி, முனியந்தாங்கல், புதுப்பட்டு, சிலாவட்டம், தேவாத்துார், சாலையூர், கொள்ளம்பாக்கம், பெரும்பாக்கம், மின்னல் சித்தாமூர், மோகல்வாடி, கூடலுார், நல்லுார், மோச்சேரி, பாப்பநல்லுார், தண்டரை, எலப்பாக்கம்.எல்.என்.புரம்.செய்யூர் தாலுகா: தேன்பாக்கம், கரிக்கந்தாங்கல், பழவூர்,சித்தாற்காடு, மணப்பாக்கம், கடப்பேரி.திருக்கழுக்குன்றம் தாலுகா: கோரப்பட்டு, பெருமாளேரி, பொன்விளைந்தகளத்துார்.



புதிய கொள்முதல் நிலையம் அமைவிடங்கள்


மதுராந்தகம் தாலுகா: குன்னங்கொளத்துார், இரும்பேடு, பள்ளியகரம், வேட்டூர், தச்சூர், கொங்கரைமாம்பட்டு, விளாங்காடு, வையாவூர், குமாரவாடி, முனியந்தாங்கல், புதுப்பட்டு, சிலாவட்டம், தேவாத்துார், சாலையூர், கொள்ளம்பாக்கம், பெரும்பாக்கம், மின்னல் சித்தாமூர், மோகல்வாடி,கூடலுார்,நல்லுார்,மோச்சேரி,பாப்பநல்லுார், தண்டரை, எலப்பாக்கம்.எல்.என்.புரம். செய்யூர் தாலுகா: தேன்பாக்கம், கரிக்கந்தாங்கல், பழவூர், சித்தாற்காடு, மணப்பாக்கம், கடப்பேரி.திருக்கழுக்குன்றம் தாலுகா: கோரப்பட்டு, பெருமாளேரி, பொன்விளைந்தகளத்துார்.








      Dinamalar
      Follow us