/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு மேலும் ஒரு அதிகாரி கைது
/
ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு மேலும் ஒரு அதிகாரி கைது
ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு மேலும் ஒரு அதிகாரி கைது
ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு மேலும் ஒரு அதிகாரி கைது
ADDED : பிப் 26, 2025 12:05 AM
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் முகமது கவுஸ், 31. கடந்த டிச., 15ம் தேதி இரவு, 20 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் அண்ணா சாலை வழியாக சென்றார்.
அப்போது, திருவல்லிக்கேணி சிறப்பு எஸ்.ஐ., ராஜா சிங், 48, சைதாப்பேட்டை காவல் நிலைய எஸ்.ஐ., சன்னிலாய்டு, 48, ஆகியோர், வருமான வரித்துறை, வணிக வரித்துறை அதிகாரிகளுடன் இணைந்து, 20 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்தனர்.
இது தொடர்பாக, முகமது கவுஸ் கொடுத்த புகாரின்படி, ராஜா சிங், சன்னிலாய்டு, வருமான வரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, 31, ஆய்வாளர் தாமோதரன், 41, ஊழியர் பிரதீப், 42, ஆகியோரை, திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். அதன்பின், வணிக வரித்துறை அதிகாரிகளான சுரேஷ், 49, பாபு, 41, ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய கொடுங்கையூரைச் சேர்ந்த வணிக வரித்துறை அதிகாரி ஜானகிராமன், நேற்று கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள ஜானகிராமனின் கார் ஓட்டுநர் அப்துல்லாவை தேடி வருகின்றனர்.