/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொல்லியல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க எதிர்பார்ப்பு
/
தொல்லியல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க எதிர்பார்ப்பு
தொல்லியல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க எதிர்பார்ப்பு
தொல்லியல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 20, 2024 09:45 PM
மாமல்லபுரம்:தொல்லியல் துறையின் பணிகளை செய்யும் ஒப்பந்த நிறுவனம், மூன்று மாதங்களாக, தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்கள் பராமரிப்பு பணிக்காக, தொல்லியல் துறை சார்பில், 20 ஆண்டுகளுக்கு முன் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் பணி ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், காலி பணியிடங்களுக்கு மீண்டும் ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.
அதற்கு மாறாக, தனியார் நிறுவனத்தை ஒப்பந்தத்தில் நியமிக்கும் 'அவுட்சோர்சிங்' நடைமுறை, தொல்லியல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒப்பந்தம் பெறும் தனியார் நிறுவனங்கள், தொல்லியல் துறையின் பணிகளுக்கு ஆட்களை நியமித்து, ஊதியம் வழங்கி வருகிறது. ஒப்பந்த நிறுவனங்கள், அவ்வப்போது மாறுவதும் உண்டு.
எந்த நிறுவனமும், தொழிலாளர்களின் ஊதியத்தை, முறையாக மாதந்தோறும் வழங்காமல், சில மாதங்களுக்கு ஒருமுறையே வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஒப்பந்த தொழிலாளர்கள் கூறியதாவது:
தனியார் நிறுவனத்தின் கீழ், மாமல்லபுரம் பிரிவில், 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதேபோன்று காஞ்சிபுரம் பிரிவிலும் உள்ளனர்.
ஒப்பந்த நிறுவனம், பிடித்தம் கழித்து, 12,000 ரூபாய் தான் மாத ஊதியமாக அளிக்கிறது. இதை நம்பியே குடும்பத்தினர் உள்ளனர்.
ஆனால், கடந்த மூன்று மாதங்களாக, ஒப்பந்த நிறுவனம் ஊதியம் அளிக்காமல் தவிர்த்து வருவதால், நாங்கள் கஷ்டப்பட்டு வருகிறோம்.
இதேபோல் அடிக்கடி நடக்கிறது. நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்குவது குறித்து, தொல்லியல் துறை நிர்வாகம், ஒப்பந்த நிறுவனத்திடம் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

