/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொது கிணறுகளுக்கு மேல்தள மூடி அனுமந்தபுரம்வாசிகள் கோரிக்கை
/
பொது கிணறுகளுக்கு மேல்தள மூடி அனுமந்தபுரம்வாசிகள் கோரிக்கை
பொது கிணறுகளுக்கு மேல்தள மூடி அனுமந்தபுரம்வாசிகள் கோரிக்கை
பொது கிணறுகளுக்கு மேல்தள மூடி அனுமந்தபுரம்வாசிகள் கோரிக்கை
ADDED : மார் 02, 2025 11:37 PM

சிங்கபெருமாள் கோவில், திருப்போரூர் ஒன்றியம், அனுமந்தபுரம் ஊராட்சியில், 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்கு உள்ள தாசரிகுப்பம் தாங்கல் ஏரியில் நான்கு இடங்களில் பொது கிணறுகள் அமைத்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏற்றி கிராமத்தினருக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
நான்கு கிணறுகளில் ஒரு கிணற்றில் மட்டுமே மேல் தளத்தில் மூடி அமைக்கப்பட்டு உள்ளது.
மற்ற மூன்று கிணறுகள் திறந்த நிலையில் உள்ள காரணத்தால், கிணற்றில் பிளாஸ்டிக் குப்பை நிறைந்தும், துாசி பாசி படிந்தும் காணப்படுகிறது.
இதன் காரணமாக நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, இந்த கிணற்றின் தண்ணீரை சுத்தப்படுத்தி மக்களுக்கு வழங்க, உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.