/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து மறைமலை நகரில் திருட முயற்சி
/
வீட்டின் பூட்டை உடைத்து மறைமலை நகரில் திருட முயற்சி
வீட்டின் பூட்டை உடைத்து மறைமலை நகரில் திருட முயற்சி
வீட்டின் பூட்டை உடைத்து மறைமலை நகரில் திருட முயற்சி
ADDED : ஆக 05, 2024 11:25 PM
மறைமலை நகர்:மறைமலை நகர் என்.ஹெச் - 1 பல்லவன் தெருவை சேர்ந்தவர் பிரேமா. இவர், அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் தன் மகளை காண, கடந்த மாதம் 2ம் தேதி சென்றார்.
நேற்று முன்தினம் காலை, பிரேமாவின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக, அக்கம் பக்கத்தினர் பிரேமாவிற்க்கு மொபைல் போன் வாயிலாக தகவல் தெரிவித்தனர். பிரேமா, அமெரிக்காவில் இருந்து தன் வழக்கறிஞர் சார்லஸ் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து, மறைமலை நகர் காவல் நிலையத்தில், சார்லஸ் புகார் அளித்தார்.
அதன்படி போலீசார் நடத்திய விசாரணையில், நீண்ட நாட்களாக வீடு பூட்டப்பட்டு இருந்ததால், மர்ம நபர்கள் நோட்டமிட்டு, பூட்டை உடைத்து திருடச் முயன்றது தெரிய வந்தது.
மேலும், பிரேமா வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் பணம் ஏதுமில்லை என, தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டை பூட்டி விட்டு, நீண்ட நாள் பயணமாக வெளியூர் செல்லும் நபர்கள், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து சென்றால், இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என, போலீசார் தெரிவித்தனர்.