/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிராமப்புறங்களில் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம்
/
கிராமப்புறங்களில் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம்
கிராமப்புறங்களில் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம்
கிராமப்புறங்களில் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : மார் 28, 2024 10:59 PM

செய்யூர்,:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்., 19ம் தேதி நடக்க உள்ளதாக, கடந்த 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியானதில் இருந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
இரண்டு நாட்களுக்குள், அரசியல் தலைவர்கள், கட்சிகளின் கொடிகள், சுவர் விளம்பரங்கள் ஆகியவை அகற்றப்பட வேண்டும் என்பது விதி.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 12 நாட்கள் கடந்த நிலையில், செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சித்தாமூர், செய்யூர், சூணாம்பேடு போன்ற பகுதிகளில், சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படாமல் உள்ளன.
மேலும், பல்வேறு இடங்களில் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள், கட்சிக் கொடிகள் மற்றும் கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன.
குறிப்பாக, தினசரி நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் சூணாம்பேடு பஜார் பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் உள்ள கட்சித் தலைவர்களின் படங்கள் மறைக்கப்படவில்லை.
போந்துார் அடுத்த சிறுகளத்துார் கிராமத்திலும், அரசியல் கட்சிக் கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன.
செய்யூர் அடுத்த வீரபோகம் ஊராட்சியில் உள்ள உயர்கோபுர மின்விளக்குகளின் கீழ் உள்ள கல்வெட்டுகளும் மறைக்கப்படவில்லை. இதே போல, பல கிராமங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக அமல்படுத்தாமல், அதிகாரிகள் அலட்சியம் இருக்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

