/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடலுாரில் குடிநீர் கிணறு குப்பை தொட்டியான அவலம்
/
கூடலுாரில் குடிநீர் கிணறு குப்பை தொட்டியான அவலம்
ADDED : ஜூலை 17, 2024 12:59 AM

அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் ஒன்றியம், கூடலுார் ஊராட்சி சேவை மைய கட்டடம் அருகே உள்ளகைவிடப்பட்ட குடிநீர் கிணற்றை, மண் கொட்டி மூடி சமன்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
கூடலுார் ஊராட்சியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு,சேவை மைய கட்டடம் அமைந்துள்ள பகுதியில், மக்களின் குடிநீர் தேவைக்காக, 30 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் கிணறுஅமைக்கப்பட்டது.
தற்போது, சில ஆண்டுகளாக குடிநீர் கிணறு பயன்பாடு இன்றி கைவிடப்பட்டது.
இந்த திறந்தவெளி கிணற்றில், அப்பகுதிமக்கள் குப்பை கொட்டி வருகின்றனர்.இதனால், சுகாதார சீர்கேடு அடைவதுடன், தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக, அப்பகுதிவாசிகள் புகார் அளித்துள்ளனர்.
எனவே, பயன்பாடின்றி உள்ள கிணற்றை மண் கொட்டி மூடி சமன்படுத்த, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதி குடியிருப்புவாசிகள் கூறியதாவது:
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றப்பட்டு, தெருக்குழாய்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் நடக்கிறது. ஆனால்,சில ஆண்டுகளாக, இந்த கிணற்று நீரை பயன்படுத்துவது இல்லை.
திறந்த வெளியாக கிணறு உள்ளதால், அதில் சிலர் குப்பையை கொட்டி வருகின்றனர்.தற்போது பெய்து வரும் மழை காரணமாக,கிணற்றில் தண்ணீர் தேங்கி, அப்பகுதிமுழுதும் துர்நாற்றம் வீசுகிறது.
எனவே, மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு,தொற்று நோய் பரவும் முன், கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.