/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
படாளம் லாரி பார்க்கிங்கில் குப்பை கழிவுகளால் சீர்கேடு
/
படாளம் லாரி பார்க்கிங்கில் குப்பை கழிவுகளால் சீர்கேடு
படாளம் லாரி பார்க்கிங்கில் குப்பை கழிவுகளால் சீர்கேடு
படாளம் லாரி பார்க்கிங்கில் குப்பை கழிவுகளால் சீர்கேடு
ADDED : ஜூன் 12, 2024 11:57 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த படாளம் லாரி பார்க்கிங் பகுதியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, லாரி ஓட்டுனர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில், நீண்ட துாரம் சரக்கு எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் வெளியூர்களுக்கு பயணம் செல்வோர் ஓய்வு எடுக்க, வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டது.
அவ்வாறு, படாளம் பகுதியில், இரு மார்க்கத்திலும் லாரி பார்க்கிங் அமைக்கப்பட்டது. தற்போது, லாரி பார்க்கிங் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள உணவகங்களில் மீதமாகும் உணவுக் கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர்.
இதை, அப்பகுதியில் உலா வரும் பன்றிகள் கிளறி விடுவதால், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதன் காரணமாக, ஓய்வு எடுக்க முடியாமல், லாரி ஓட்டுனர்கள் மிகுந்த அவதி அடைகின்றனர்.
கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்றி, மீண்டும் குப்பை கொட்டாதவாறு முள்வேலி அமைக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, லாரி ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.