/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பந்தம்பரி உற்சவம் திருப்போரூரில் விமரிசை
/
பந்தம்பரி உற்சவம் திருப்போரூரில் விமரிசை
ADDED : மார் 14, 2025 01:20 AM

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கடந்த 3ம் தேதி மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
காலை, மாலை உற்சவங்கள் நடக்கின்றன. முக்கிய விழாவான தேர் திருவிழா, தெப்பல் திருவிழா நடந்து முடிந்தது.
தொடர்ந்து, நேற்று 11ம் நாள் உற்சவமாக, பந்தம்பரி உற்சவம் நடந்தது.
இதில், சிறப்பு அலங்காரத்தில் கந்த பெருமான் தெற்கு மாட வீதி, ஐயம்பேட்டை தெரு வழியாக கிரிவல பாதையில் சென்றார்.
அப்போது, இள்ளலுார் சாலை வழியாக சென்ற போது, ஆண்டுக்கு ஒரு முறை வருவதால், கந்த பெருமானுக்கு அப்பகுதிவாசிகள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
மேலும், மக்கள் வாழை மரம், அலங்கார தோரணங்கள் கட்டி, பட்டாசு வெடித்து வரவேற்று மகிழ்ந்தனர்.
பின், இரவு 9:00 மணியளவில், வடக்கு மாடவீதி வழியாக சுவாமி கோவிலை வந்தடைந்தார். இன்று வேடர்பரி உற்சவமும், நாளை திருக்கல்யாண உற்சவத்துடனும் விழா நிறைவடைகிறது.