/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவி
/
பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவி
பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவி
பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவி
ADDED : மார் 05, 2025 01:59 AM

மேல்மருவத்துார்:பங்காரு அடிகளார் பிறந்தநாள் விழாவையொட்டி, ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், செவ்வாடை பக்தர்கள் மற்றும் அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
மேல்ருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளார் 85 வது பிறந்தநாளையொட்டி, ஆதிபராசக்தி அம்மன், பங்காரு அடிகளார் சிலைக்கு, சிறப்பு அபிஷேகம், நேற்று முன்தினம் நடந்தது.
தமிழகம் மட்டும் இன்றி, பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து, ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தமைமை வகித்தார். அவர், பங்காரு அடிகளார் 85 வது பிறந்தநாள் விழா மலரை வெளியிட, மலேசிய துாதரக தென்னிந்திய பிரதிநிதி சரவணகுமார் பெற்றுக்கொண்டார்.
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ், உமாதேவி ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராஜேஸ்வரன், கலையரசன், சென்னை குழந்தைகள் நல தலைமை அதிகாரி சுரேஷ் குமார், மாவட்ட நீதிபதி கருணாநிதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து செவ்வாடை பக்தர்கள் மற்றும் அரசு பள்ளிகளுக்கு உபகரணங்கள், 15 ஆயிரம் பேருக்கு, மருத்துவ உபகணரங்கள், தையல் இயந்திரம், ஸ்கூட்டர், பெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவராணம் என, 4 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இணையதளம் மூலம் குரு போற்றி கோடி அர்ச்சனை செய்யப்பட்ட நிகழ்ச்சிக்காக, கின்னஸ் ஆப் ரெக்கார்டர் நிறுவனத்தினர், உலக சாதனை விருதை வழங்கினர்.
ஏற்பாடுகளை சேலம், நாமக்கல் மாவட்ட மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்கள் மற்றும் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.