/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமயிலுார் சாலையோரத்தில் தடுப்பு அமைத்து நடவடிக்கை
/
சிறுமயிலுார் சாலையோரத்தில் தடுப்பு அமைத்து நடவடிக்கை
சிறுமயிலுார் சாலையோரத்தில் தடுப்பு அமைத்து நடவடிக்கை
சிறுமயிலுார் சாலையோரத்தில் தடுப்பு அமைத்து நடவடிக்கை
ADDED : ஆக 12, 2024 03:48 AM

சித்தாமூர் : சித்தாமூர் அருகே சிறுமயிலுார் - -பெரியகயப்பாக்கம் இடையே, 5 கி.மீ., தார் சாலை உள்ளது. பேட்டை, கடப்பேரி, இரண்டடி, மதுராபுதுார் உள்ளிட்ட கிராம மக்கள், சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
பேட்டை கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில், சாலை ஓரத்தில் தடுப்புகள் அமைக்கப்படாததால், இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
ஒரே சமயத்தில், இரண்டு கனரக வாகனங்கள் எதிரெதிரே வந்தால், சாலையை கடந்து செல்ல சிரமப்பட்டன. எனவே, பெரும் விபத்து ஏற்படுவதற்குள், சாலை ஓரத்தில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதன் விளைவாக, நெடுஞ்சாலைத்துறை சார்பாக, விபத்துகள் ஏற்படும் இடங்களில், சாலையோர தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.