/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேடந்தாங்கலில் பறவைகள் கணக்கெடுப்பு பணி
/
வேடந்தாங்கலில் பறவைகள் கணக்கெடுப்பு பணி
ADDED : மார் 09, 2025 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம், வனத்துறை சார்பில், ஆண்டுதோறும் மாநிலம் முழுதும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.
செங்கல்பட்டு வனக்கோட்டத்தின் வாயிலாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பிற்கு 16 இடங்களும், நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பிற்கு 16 இடங்களும் தேர்வு செய்யப்பட்டது. நேற்று, நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் காலை 6:00 முதல் 9:00 மணி வரை நடந்தது.
வனத்துறை அதிகாரிகள் வழிகாட்டுதலில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கணக்கெடுக்கும் பணியில் பங்கேற்றனர். வரும் 15, 16ல் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.