/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு
/
கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு
ADDED : ஆக 29, 2024 01:40 AM

மதுராந்தகம்:படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்தியூர் கிராமத்தில், 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த மோட்டம்மன் கோவில் உள்ளது. கோவில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு, சில தினங்களுக்கு முன், கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து, கருவறையில் அம்மன் கழுத்தில் இருந்து தங்கத்தாலி செயின் மற்றும் கோவில் பூஜை பொருட்களை திருடிச் சென்றனர்.
கோவில் பூசாரி, நேற்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு சென்ற போது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, படாளம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். பின், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.