/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நிறுத்தத்திற்குள் செல்லாத பஸ்கள் ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்
/
நிறுத்தத்திற்குள் செல்லாத பஸ்கள் ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்
நிறுத்தத்திற்குள் செல்லாத பஸ்கள் ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்
நிறுத்தத்திற்குள் செல்லாத பஸ்கள் ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்
ADDED : ஆக 25, 2024 11:23 PM
குரோம்பேட்டை: குரோம்பேட்டை பேருந்து நிறுத்தத்தை, நியூ காலனி, ராதா நகர், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் பயன்படுத்து கின்றனர்.
தாம்பரத்தில் இருந்து, கோயம்பேடு, ஆவடி, பிராட்வே உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், இங்கு நின்று செல்கின்றன.
பேருந்துகள், பயணியர் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள நிழற்குடைக்குள், சில பேருந்துகள் செல்வதில்லை.
சாலையிலே பயணியரை ஏற்றி, இறக்கி செல்வதால், ஜி.எஸ்.டி., சாலையில் தினமும் நெரிசல் ஏற்படுகிறது.
அதுபோன்ற நேரங்களில், நிறுத்தத்திற்குள் காத்திருக்கும் பயணியர், பேருந்துக்காக ஓடி ஏறும் சூழலும் உள்ளது.
அதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்னையில் தலையிட்டு, பேருந்துகள் அனைத்தும், நிழற்குடை நிறுத்தத்திற்குள் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.