/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 17, 2024 01:08 AM
செங்கல்பட்டு, தமிழகத்தில், வீர சாகச செயல் புரிந்த பெண்களுக்கு வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதுக்கு, சாதனையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை வாயிலாக, துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண்களுக்கு, கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுக்கு தேர்வு செய்வோருக்கு பதக்கத்துடன், 5 லட்ச ரூபாய் காசோலை, பாராட்டு சான்றிதழ் சுதந்திர தின விழாவில்முதல்வர் வழங்குவார்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சாதனை பெண்கள், http://www.awards.tn.gov.in/- என்ற இணையதளபக்கத்தில், வரும் 18ம் தேதிக்குள்விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்கள் பெற, கலெக்டர் அலுவகத்தில், நான்காவது தளத்தில், பி பிளாக்கில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.