/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
லாட்டரி விற்ற இருவர் மீது வழக்கு பதிவு
/
லாட்டரி விற்ற இருவர் மீது வழக்கு பதிவு
ADDED : ஆக 04, 2024 09:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக, செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, புதிய பேருந்து நிலையம் பகுதியில் போலீசார் நடத்திய விசாரணையில், அங்கு லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு இருந்த செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த இப்ராஹிம், 43, குமார், 54, ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.