/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடற்கரை - செங்கை ரயில் சேவையில் இன்று மாற்றம்
/
கடற்கரை - செங்கை ரயில் சேவையில் இன்று மாற்றம்
ADDED : மே 14, 2024 06:38 AM
சென்னை : ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று, மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில், செங்கல்பட்டு பணிமனை மேம்பாட்டு பணி, இன்று இரவு முதல் அதிகாலை வரையில் நடக்க உள்ளது. இதனால், இந்த தடத்தில் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
l சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு இன்று இரவு 8:35 மணி ரயில், சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும்
l சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு இன்று இரவு இரவு 10:05 மணி ரயில், சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும்
l செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு இரவு 11:00 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

