/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை அரசு மருத்துவமனை கட்டடங்கள் புதுப்பொலிவு
/
செங்கை அரசு மருத்துவமனை கட்டடங்கள் புதுப்பொலிவு
ADDED : மார் 14, 2025 01:01 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பழைய கட்டடங்களில், வண்ணம் அடிக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவு, தாய் வார்டு, குழந்தைகள் வார்டு, கண் மருத்துவமனை, ஒருங்கிணைந்த தாய்-சேய் நல வார்டு, இதய சிகிச்சை பிரிவு, மனநல பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன.
இங்கு, செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டடங்கள் பல ஆண்டுகளுக்கு முன், வண்ணம் அடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இருந்தது. அதன் பின், கட்டடங்கள் முறையாக பராமரிக்கப்படாததால், பழுதடைந்த கட்டடங்கள் போல் இருந்தது.
இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து கட்டடங்களுக்கும் வண்ணம் அடிக்க, மருத்துவமனை நிர்வாக அதிகாரிக்கு, மருத்துவமனை முதல்வர் சிவசங்கரன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, அவரச சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து கட்டடங்களுக்கும், வண்ணம் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது, மருத்துவமனை வளாகம், புதுப்பொலிவு பெற்று வருகிறது.