/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் புதிய திட்டங்கள் துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
/
செங்கையில் புதிய திட்டங்கள் துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
செங்கையில் புதிய திட்டங்கள் துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
செங்கையில் புதிய திட்டங்கள் துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : மார் 10, 2025 11:31 PM
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய திட்டங்களை, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு விழா, நகர்ப்புற பகுதிகளில் பட்டா வழங்கும் திட்டம் துவக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி மைய வளாகத்தில், இன்று நடக்கிறது.
இந்த விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் மற்றும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இதுமட்டுமின்றி, 50,000க்கும் மேற்பட்டவர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும், மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
விழா மேடை அருகே பாதுகாப்பு மற்றும் செங்கல்பட்டு நகரைச் சுற்றி, 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரச்னைகளுக்கு தீர்வு
படாளம் - உதயம்பாக்கம் இடையே பாலாற்று தடுப்பணையுடன் கூடிய பாலம் கட்ட, 410 கோடி ரூபாய் நிதி கேட்டு, நீர்வளத்துறை அரசுக்கு கருத்துரு அனுப்பி கிடப்பில் உள்ளது.
செய்யூர் பகுதியில், அரசு கலைக் கல்லுாரி அமைப்பது, அச்சிறுபாக்கத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா ஏற்படுத்துவது, மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகா பகுதிகளில் தொழிற்சாலை துவங்குவது உள்ளிட்ட திட்டங்களும் கிடப்பில் உள்ளன.
இந்த பிரச்னைகளுக்கு, முதல்வர் வருகையால் தீர்வு கிடைக்கும் என, பல்வேறு தரப்பிலிருந்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.