தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குழந்தை வளர்ப்பு திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு

குழந்தை வளர்ப்பு திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு

குழந்தை வளர்ப்பு திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : செப் 03, 2024 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2024 05:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு,: குழந்தைகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தில், குழந்தைகளை வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில், சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ், குழந்தைகள் இல்லங்கள் உள்ளன. இங்கு, பல்வேறு சூழல்களில் பாதிக்கப்பட்டு, பெற்றோர் இருவரையும் இழந்த, 6 - 18 வயதுக்குட்பட்டவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்களை, பெற்றோரிடம் இணைத்து, குழந்தைகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் குறித்து முழுமையாக அறிந்து, குழந்தைகள் வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின் வாயிலாக, குழந்தைகளை வளர்க்க விருப்பம் உள்ளவர்கள், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் 63826 13182 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us