/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சின்னமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
சின்னமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
சின்னமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
சின்னமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : மார் 25, 2024 05:36 AM

செங்கல்பட்டு : செங்கல்பட்டு, சின்னமேலமையூரில் சின்னமுத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 2013- - 14ம் ஆண்டு திருப்பணிகள் துவங்கி, ராஜகோபுரங்கள், சன்னிதிகள் புதுப்பிக்கப்பட்டன.
கோவில் பழமை மாறாமல் புதிய கருங்கல்லால் ஆன, 42 அடி உயரமுள்ள மூன்று நிலை விமானம், கருங்கல்லால் ஆன, 64 அடி உயர ஐந்து நிலை ராஜகோபுரம், மஹா மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டன.
சன்னிதிகளில், குபேர விநாயகர், காசிவிஸ்வநாதர், வரதராஜ பெருமாள், கல்யாண சுப்பிரமணியர், விஷ்ணு துர்கை, கால பைரவர், சண்டிகேஷ்வரர், தட்சணாமூர்த்தி, 12 அடி உயர முள்ள ஏழு தலை கருங்கல் நாகத்தின் கீழ் சப்த கன்னிமார் சிலைகள் நிறுவப்பட்டன.
திருப்பணிகள் சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தன. 11 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேக விழா கடந்த 20ம் தேதி துவங்கியது.
நேற்று காலை 5:00 மணிக்கு, நான்காம் கால பூஜைகள், மூல மந்திர ஹோமங்களுடன் கலசங்கள் புறப்பட்டு, சின்ன முத்துமாரியம்மன், ராஜகோபுரம், விமான கோபுரம் மற்றும் பரிவார கோபுரங்கள் மற்றும் அனைத்து சன்னிதிகளிலும் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

