/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சருகுகள் தீப்பற்றி தென்னைகள் நாசம்
/
சருகுகள் தீப்பற்றி தென்னைகள் நாசம்
ADDED : ஏப் 12, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில்,பூஞ்சேரி சந்திப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள தனியார் காலி நிலத்தையொட்டி தென்னந்தோப்பு உள்ளது. இங்கு, நேற்று பிற்பகல் 1:15 மணிக்கு, காலி இடத்தில் அடர்ந்திருந்த சருகுகளில் தீப்பற்றியது. பின், அருகில் இருந்த தென்னந்தோப்பிற்கும் தீ பரவியது.
இதுகுறித்து, அப்பகுதியினர் மாமல்லபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி, மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இதில், 7 ஏக்கர் தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

