/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பணப் பட்டுவாடாவிற்கு புள்ளி விபரம் சேகரிப்பு தேர்தலுக்கு 2 வாரமே உள்ளதால் கட்சியினர் தீவிரம்
/
பணப் பட்டுவாடாவிற்கு புள்ளி விபரம் சேகரிப்பு தேர்தலுக்கு 2 வாரமே உள்ளதால் கட்சியினர் தீவிரம்
பணப் பட்டுவாடாவிற்கு புள்ளி விபரம் சேகரிப்பு தேர்தலுக்கு 2 வாரமே உள்ளதால் கட்சியினர் தீவிரம்
பணப் பட்டுவாடாவிற்கு புள்ளி விபரம் சேகரிப்பு தேர்தலுக்கு 2 வாரமே உள்ளதால் கட்சியினர் தீவிரம்
ADDED : மார் 29, 2024 09:13 PM
காஞ்சிபுரம்:லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்த நிலையில், பிரதான கட்சி களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதால், வேட்பாளர்களின் பிரசாரம் மேலும் தீவிரமாகியுள்ளது.
காஞ்சிபுரம் தொகுதி யில், தி.மு.க., வேட்பாளர்செல்வம், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர், பா.ம.க., வேட்பாளர் ஜோதி, நாம் தமிழர் வேட்பாளர் சந்தோஷ் குமார் ஆகிய பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் கிராமம் வாரியாக, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வாரியாகபிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ஒவ்வொருபகுதியிலும் உள்ளதங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு 'அசைன்மென்ட்' கொடுத்து பணியாற்றஉத்தரவிட்டுள்ளனர்.
அதில் முக்கிய பணியாக, தங்கள் பகுதியில் உள்ள வாக்காளர்களில், 'நம் கட்சியினர் எத்தனை பேர் உள்ளனர்' என்ற விபரத்தை கணக்கெடுத்து கொடுக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு கிராமம், பேரூராட்சி, மாநகராட்சி வார்டு வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும், தங்கள் கட்சியினருக்கு உள்ள வாக்காளர்கள் எத்தனை பேர், அதில் ஆண், பெண்எத்தனை பேர் என கணக்கெடுக்கின்றனர்.
கணக்கெடுப்பு பணி நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என, பிரதான கட்சியினர் தங்கள் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளும் நிர்வாகிகளுக்கு நான்கு நாள் செலவாக, 20,000 முதல் 30,000 ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கணக்கெடுப்பு பணி முடிந்த பின், ஒவ்வொரு பகுதியிலும், எத்தனை வீடுகளில், எத்தனை ஓட்டுக்கு பணம் கொடுக்க நேரிடும் என்ற புள்ளி விபரத்துக்காக இந்த கணக்கெடுப்பு பணியை அரசியல் கட்சியினர் மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து அரசியல் கட்சியினர் கூறியதாவது :
ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுக்கு பணம் கொடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தேர்தல் கமிஷனாலும் இவற்றை தடுக்க முடியவில்லை.
இதனால், வேட்பாளர்மற்றும் அரசியல் கட்சியினர் இம்முறையும் ஓட்டுக்கு பணம் கொடுப்பர். எத்தனை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க நேரிடும் என்ற தோராய கணக்கு வேண்டும் என்பதற்காகவே, வார்டு வாரியாகவும், கிராமம், பகுதி வாரியாகவும் கட்சியினர் கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.
தங்கள் கட்சி ஓட்டு எத்தனை உள்ளது என்ற விபரம் அளித்தவுடன், மேலிடத்திலிருந்து பணம் வரும். அவற்றை வாக்காளர்களுக்கு ரகசியமாக 'சப்ளை' செய்ய வேண்டும். இதுதான் கட்சி நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மென்டாக தற்போது உள்ளது.
காஞ்சிபுரம் தொகுதியில், 17.3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், 25 சதவீதம் பேர் ஓட்டளிப்பதே இல்லை. 4.5 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட வர மாட்டார்கள்.
மீதமுள்ள 12 லட்சம் பேரில், நாம் தமிழர், பா.ம.க., சுயேச்சை ஆகியோர் மூன்று லட்சம் ஓட்டு பெறுவர். இதுபோக, ஒன்பது லட்சம் ஓட்டுகளில், தி.மு.க., - -அ.தி.மு.க., ஆகிய இரு பிரதான கட்சியினர் யார் அதிகம் பெறப் போகிறார்கள் என்பதில் தான் போட்டியே உள்ளது.
வெற்றி பெறுவதற்கு, ஐந்து லட்சம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வாய்ப்புள்ளது. இதற்காக தான், கட்சி நிர்வாகிகள் இப்போதே கணக்கெடுப்பு நடத்திவருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

