/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தகிக்கும் வெயிலில் இருந்து பறவைகளை காக்க முன்வாருங்கள்
/
தகிக்கும் வெயிலில் இருந்து பறவைகளை காக்க முன்வாருங்கள்
தகிக்கும் வெயிலில் இருந்து பறவைகளை காக்க முன்வாருங்கள்
தகிக்கும் வெயிலில் இருந்து பறவைகளை காக்க முன்வாருங்கள்
ADDED : ஏப் 07, 2024 12:39 AM

சென்னை மற்றும் புறநகரில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி 38 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது. வெயில் காலத் தில் உடல் களைப்பு, உஷ்ணம் ஏற்படாமல் இருக்க தினமும் 5 லி., தண்ணீர் குடிக்க வேண்டும் என, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
விலங்குகளை பொறுத்தவரையில் நாய்களுக்கு 2 லிட்டர்; பூனைகள், 30 மி.லிட்டர்; காட்டுப்பறவைகள், 400 மி.லிட்டர் - முதல் 1லிட்டர்; வீட்டு பறவைகள், 300 முதல் 500 மி.லிட்டரும் தண்ணீர் பருகும் என, கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கோடைகாலத்தில் மனிதர்களை போல விலங்குகள், பறவைகளும் வெயிலால் அதிகம் களைப்படைகின்றன. அவை தண்ணீருக்காக அலைய வேண்டி உள்ளது.
எனவே, வீட்டு மொட்டை மாடி, தோட்டம் அல்லது வீட்டு ஜன்னல் பகுதியில் சிறிது தண்ணீர் பறவைகளுக்காக வையுங்கள். காலையிலோ, இரவிலோ அல்லது கிடைக்கும் நேரங்களிலோ தண்ணீரை மாற்றி விடுங்கள்.
குறிப்பாக, பறவைகள், விலங்குகளுக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, அந்தந்த பகுதி நலச்சங்கத்தினர், ஒவ்வொரு தெருவிலும் சிறு தொட்டிகள் அமைத்து, தண்ணீர் வைக்க முன்வர வேண்டும் என, பிராணிகள் நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- -நமது நிருபர் --

