/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கெட்டுப்போன பால் விவகாரம் ஆவின் நிறுவனம் விளக்கம்
/
கெட்டுப்போன பால் விவகாரம் ஆவின் நிறுவனம் விளக்கம்
ADDED : மார் 29, 2024 09:17 PM
சென்னை:'பால் கெட்டுப்போனதாக புகார் கூறியவர் ஏஜன்ட் இல்லை; ஆய்வில் பால் நல்ல தரத்துடன் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது' என ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத் தில் பால் கெட்டுப்போனதாக நம் நாளிதழ் வெளியிட்ட செய்திக்கு ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கம்:
காக்களூர் பால் பண்ணையில் இருந்து 27ம் தேதி காலை வினியோகத்திற்கு அனுப்பப்பட்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் கெட்டுப்போனதாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதி ஏஜன்ட் பச்சையப்பன் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.
அன்று, 4,000 லிட்டர் ஆரஞ்சு பால் பாக்கெட்டுகள், 11,000 லிட்டர் மற்ற பால் பாக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டன.
வினியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகளின் மாதிரிகள், ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டது. இதில், பால் நல்ல தரத்துடன் இருப்பதுகண்டறியப்பட்டது.
ஆரஞ்சு பால் பாக்கெட்டுகளை காய்ச்சும் போது, பால் பாத்திரத்தில் ஒட்டுவதாக மட்டுமே தெரிவித்தனர்.
இவ்வாறு, சில ஏஜன்டுகளில் இருந்து மட்டுமே புகார்கள் எழுப்பப்பட்டு உள்ளது. புகார் தெரிவித்த பச்சையப்பன் என்ற நபர், காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் விற்பனை முகவராக இல்லை.
இவ்வாறு அதில்கூறப்பட்டு உள்ளது.

