
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் மாற்றி உள்ள மின்கம்பம் சேதம்
திருக்கழுக்குன்றம் ராணி அம்மாள் பள்ளி அருகில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி உள்ள மின் கம்பத்தின் சிமென்ட் சிலாப்புகள் உடைந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து, எந்நேரமும் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இந்த மின்மாற்றியில் இருந்து, சுற்றுவட்டார பகுதிக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, அசம்பாவிதம் நடப்பதற்கு முன், மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை அகற்றி, புதிதாக அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.ஜனார்த்தனன்,
திருக்கழுக்குன்றம்

