/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெரியகயப்பாக்கம் குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைப்பு
/
பெரியகயப்பாக்கம் குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைப்பு
பெரியகயப்பாக்கம் குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைப்பு
பெரியகயப்பாக்கம் குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைப்பு
ADDED : ஜூன் 16, 2024 12:30 AM

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த பெரியகயப்பாக்கம் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஏரிக்கரைப் பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து, மின் மோட்டார் வாயிலாக மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக கிராம மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
குடிநீர் கிணற்றுக்கு அமைக்கப்பட்டு இருந்த மேற்புற மூடி சேதமடைந்து, கிணற்றில் இடிந்து விழுந்ததால், மேற்புறத்தில் மூடி இல்லாமல், பாம்பு, எலி, பறவைகள் போன்றவை கிணற்றில் விழுவதாக, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், பெரியகயப்பாக்கம் ஊராட்சி சார்பாக, சேதமடைந்த மேற்புற மூடி அகற்றப்பட்டு, குடிநீர் கிணற்றில் இருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டு, புதிய இரும்பு மேல்தளம் அமைக்கப்பட்டுள்ளது.