ADDED : ஆக 09, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
திருப்போரூர் பேரூராட்சியில் மீன் அங்காடி செயல்படுகிறது. இந்த மீன் அங்காடியை, பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.
இங்கு, மீன், கருவாடு, நண்டு, இறால் உள்ளிட்டவை விற்பனைக்காக, 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
மேலும், இதன் அருகே உள்ள கட்டடத்தில் ஆடு, கோழி இறைச்சி கடைகளும் உள்ளன.
ஞாயிறு விடுமுறையொட்டி, நேற்று பொதுமக்கள் மீன், ஆடு மற்றும் கோழி இறைச்சி வாங்க வந்திருந்தனர்.
இதனால், மீன் மற்றும் இறைச்சி கடைகளில் அசைவ பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும், மீன் விலை அதிகரித்தும் காணப்பட்டது.
