/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுார் மேம்பாலத்தில் தேங்கிய மண் குவியலால் விபத்து அபாயம்
/
வண்டலுார் மேம்பாலத்தில் தேங்கிய மண் குவியலால் விபத்து அபாயம்
வண்டலுார் மேம்பாலத்தில் தேங்கிய மண் குவியலால் விபத்து அபாயம்
வண்டலுார் மேம்பாலத்தில் தேங்கிய மண் குவியலால் விபத்து அபாயம்
ADDED : ஏப் 01, 2024 02:31 AM
கூடுவாஞ்சேரி:பெருங்களத்துாரில் இருந்து படப்பை மற்றும் வாலாஜாபாத், காஞ்சிபுரம் செல்லும் வாகனங்கள், இரணியம்மன் கோவில் அருகில் உள்ள வண்டலுார் மேம்பாலத்தில் செல்கின்றன.
அதேபோல், செங்கல்பட்டு - தாம்பரம் இரு மார்க்கத்திலும் செல்லும் வாகனங்களும் மேம்பாலத்தில் ஏறி, இறங்கி செல்கின்றன.
இந்த மேம்பாலத்தில், அதிகமான அளவில், மண் குவியல்கள் மற்றும் சிறிய ஜல்லிக்கற்கள் குவிந்துள்ளன. இதில், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, வாகனத்தில் இருந்து விழுந்து எழுந்து செல்கின்றனர்.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
வண்டலுார் மேம்பாலத்தில் தேங்கியுள்ள மண் குவியல் குறித்து, பலமுறை நெடுஞ்சாலை துறையினருக்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, மேம்பாலத்தில் குவிந்துள்ள மண் குவியல்களை அகற்றி, சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.