/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாய்ந்த நிலையில் மின்கம்பம் நெடுமரத்தில் விபத்து அபாயம்
/
சாய்ந்த நிலையில் மின்கம்பம் நெடுமரத்தில் விபத்து அபாயம்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் நெடுமரத்தில் விபத்து அபாயம்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் நெடுமரத்தில் விபத்து அபாயம்
ADDED : செப் 08, 2024 12:34 AM

கூவத்துார்:கூவத்துார் அடுத்த நெடுமரம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம்.
இங்கு நெல், மணிலா, கரும்பு, எள், உளுந்து, தர்பூசணி ஆகியவை பருவத்திற்கு ஏற்றாற்போல பயிரிடப்படுகிறது. இப்பகுதிக்கு, கூவத்துார் துணை மின்நிலையம் வாயிலாக மின் வினியோகம் செய்யப்படுகிறது.
விவசாய நிலங்களின் மீது அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் தாழ்வாக தொங்குகின்றன. மேலும், பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்து, சாய்ந்து விழும் நிலையில் உள்ளன.
விவசாய நிலத்தில் உள்ள மின்மோட்டார்களுக்கு மின் வினியோகம் செய்ய பொருத்தப்பட்டுள்ள மின்மாற்றி, பலத்த காற்று வீசினால் சாய்ந்து விழும் அபாய நிலை உள்ளது.
இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து ஏற்படுவதற்கு முன் பழுதடைந்துள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.