/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெருங்களத்துார் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
/
பெருங்களத்துார் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
ADDED : மே 20, 2024 09:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்: பெருங்களத்துார் சித்தேரியில் செத்து மிதக்கும் மீன்களால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
தாம்பரம் அருகே பெருங்களத்துாரில், சித்தேரி உள்ளது. இந்த ஏரியைச் சுற்றியுள்ள குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஏரியில் கலப்பதால், நீர் மாசடைந்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஏரியில் உள்ள மீன்கள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் சில நாட்களாக அதிகளவில் செத்து மிதக்கின்றன.
கழிவுநீர் கலப்பால் ஏரி நீர் மாசடைந்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற, பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

