/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை விரிவாக்கம் பகுதியில் 400 மரங்களை அகற்ற முடிவு?
/
சாலை விரிவாக்கம் பகுதியில் 400 மரங்களை அகற்ற முடிவு?
சாலை விரிவாக்கம் பகுதியில் 400 மரங்களை அகற்ற முடிவு?
சாலை விரிவாக்கம் பகுதியில் 400 மரங்களை அகற்ற முடிவு?
ADDED : மே 14, 2024 10:20 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட அளவிலான பசுமை குழு தொடர்பான கூட்டம், செங்கல்பட்டு கலெக்டரும், பசுமை குழுவின் தலைவருமான அருண்ராஜ் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.
மாவட்ட பசுமை குழு உறுப்பினர் செயலரும், மாவட்ட வன அலுவலருமான ரவிமீனா, மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலை விரிவாக்கப் பணிக்காக 16 மரங்களையும், தேசிய நெடுஞ்சாலையான தாம்பரம் -- திண்டிவனம் சாலையில், சுரங்கப்பாதை அமைக்கும் பகுதியில், 408 மரங்களையும் வெட்டுவதற்கு அனுமதிகோரி, நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் ஆகியோர் மனு அளித்திருந்தனர்.
திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம், பொன்பதர்கூடம் ஊராட்சியில், தைலமரங்களை பொது ஏலம் விடுதல் வாயிலாக அப்புறப்படுத்த, செங்கல்பட்டு சமூக வனக்கோட்ட அலுவலர் மனு அளித்திருந்தார்.
இந்த மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
அதன்பின், திட்டப்பணிகள் நடைபெறும் பகுதிகள் மற்றும் தைலமரம் ஏலம் விடும் பகுதியை ஆய்வு செய்ய, குழுவினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

