/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோர பள்ளம் மண் கொட்டி சீரமைப்பு
/
சாலையோர பள்ளம் மண் கொட்டி சீரமைப்பு
UPDATED : ஜன 28, 2025 08:12 AM
ADDED : ஜன 27, 2025 11:19 PM

பவுஞ்சூர், செய்யூரில் இருந்து மடையம்பாக்கம் வழியாக நெல்வாய்பாளையம் செல்லும் 8 கி.மீ., சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இதை கீழச்சேரி, ஆக்கினாம்பட்டு, விரபோகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.
சாலையில் இருசக்கர வாகனம், கார், லாரி,பேருந்து என தினசரி ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
கடந்த ஆண்டு பருவமழையின் போது வீரபோகம் ஏரி உபரிநீர் கால்வாய் அருகே வயல்வெளியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலை ஓரத்தில் இருந்த மண் அடித்துச் சென்றதால், 4 அடி பள்ளம் ஏற்பட்டது.
இதனால், இரண்டு கனரக வாகனங்கள் எதிரெதிரே செல்லும்போது பள்ளத்தில் கவிழ்ந்தும், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலையும் இருந்தது. இதுகுறித்து நம் நாளிதழில் வெளியிட்ட செய்தி எதிரொலியாக, சாலையோரம் ஏற்பட்டு இருந்த பள்ளம் நெடுஞ்சாலைத் துறையின் பொக்லைன் இயந்திரம் மூலமாக மண் கொட்டி சீரமைக்கப்பட்டது.

